search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்சாப் கட்சி"

    பாகிஸ்தானில் ஊழல் அரசியல்வாதிகளை ஒழிக்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். #ImranKhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த ஜூலை மாதம் நடந்த பாராளுமன்ற தேர்தலில் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இம்ரான்கான் பிரதமராக பதவி ஏற்றார்.

    இந்த நிலையில் பிரதமர் இம்ரான்கானை லாகூரில் சமூக ஆர்வலர்கள் நேற்று சந்தித்தனர். அதன் பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் உள்ளது. இதற்கு முன்பு இருந்தவர்கள் பல ஆண்டு காலமாக நாட்டை கொள்ளையடித்து நாசமாக்கிவிட்டனர். அவர்கள் பொது மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து சேர்த்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

    அதற்கான புதிய சட்டம் இயற்றப்படும். இந்த சட்ட வரைவு விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். அதில் ஊழல் அரசியல்வாதிகள் பற்றி தகவல் கொடுக்கும் சமூக நல ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் அம்சங்களும் இடம் பெறும் என்றார்.

    இந்த சட்டம் குறித்து வேறு விளக்கம் எதுவும் அவர் அளிக்கவில்லை.  #ImranKhan
    இம்ரான்கானின் 3 வது மனைவியான புஷ்ரா மனேகாவின் மகள் மெஹ்ரு ஹயாத் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியில் உறுப்பினராக சேர்ந்துள்ளார். #Imrankhan
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து அக்கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

    சமீபத்தில் அவர் தனது மத ஆலோசகர் புஷ்ரா மனேகாவை 3-வது திரு மணம் செய்து கொண்டார். அவர் ஏற்கனவே திருமணமானவர். 5 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் புஷ்ரா மனேகாவின் மகள் மெஹ்ரு ஹயாத் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெக்ரிக்-இ- இன்சாப் கட்சியில் உறுப்பினராக சேர்ந்தார். அவருடன் மேலும் 2 பேர் இணைந்தனர்.

    கட்சியில் இணைந்த மெஹ்ரு கூறும்போது, நாட்டில் நடைபெறும் குற்றங்களை களைய பாடுபடப் போவதாக தெரிவித்தார்.

    இவருக்கு கட்சியில் முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று தெரிகிறது. அதற்கு கட்சியில் எதிர்ப்பு கிளம்பும் நிலை உள்ளது. ஏனெனில் இம்ரான்கான் தனது கட்சியில் தகுதி அடிப்படையில்தான் பதவி வழங்கி வருகிறார். தேவையின்றி உறவினர்களுக்கு பதவி வழங்குவதையும், வாரிசு முறை தலைமையையும் அவர் எதிர்த்து வருகிறார். #Imrankhan
    ×